ABOUT
history
பொற்பத்தங்கேணி வீரகத்தி விநாயகர் ஆலயம் அல்லது நாவலப்பிள்ளையார்.
இவ்வாலயம் மாசேரி எனும் கிராம சேவையாளர் பிரிவில் அடங்குகின்றது. வரணியில் ஓர் பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயம் பொற்பத்தை எனும் நாவரங்கள் நிறையக் காணப்பட்டதாலும், அதனுடன் சேர்ந்து ஓர் பழைமையான குளம் இருந்ததாலும் அங்கு அமைந்த இவ்வாலயத்திற்கு இப்பெயர் உண்டானதாக அறிய முடிகின்றது. ஆலயத்தின் பழைய பெயர் இதுவேயாகும். பழைய தோம்புகளிலும் இவ்வாறே உள்ளது. பின்பு பல காலங்களின் பின் நாவலமரங்கள் நிறையக் காணப்பட்டதால் நாவலப்பிள்ளையார் எனப் பலராலும் அழைக்கப்படலாயிற்று.இத்தலம் மூர்த்தி, தவம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புகளுடையதாக உள்ளது.
இவ்வாலயத்திற்கும் தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தி லமையும் வேதாரணியம் தலத்திற்கும் தொடாபிருப்பதை அறிய முடிகின்றது. பண்டைய காலம் தொடக்கம் வர்த்தகம், தலயாத்திரை என்ற வகையில் வரணிக்கும் இந்தியாவுக்கும் தொடர்புகள் இருந்து வந்ததை பலநிலைகளில் எம்மால் அறியமுடிகிறது. சைவமக்களாகிய இவ்வூரவர் வள்ளிபுரம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகங்களிலிருந்து தமிழகத்தின் கோடியக்கரைக்குச் சென்று வேதாரண்யத்தி லிருந்து சிதம்பரம் சென்று வந்ததை அறிய முடிகின்றது, அவ்வாறு சென்று வரும்போது புராண வரலாறுகளின்படி சப்தவிடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யத்தில் உள்ள வீரகத்தி விநாயகர் இராமனுடைய வீரகத்தி தோஷத்தை நீக்கிப் பெருமை பெற்றவராகக் கூறப்பட்டுள்ளது””அதனால் அவ்விநாயகரை அங்கு செல்லும் அடியவர் பெருவிருப்புடன் சிறப்பான வழிபாடுகள் செய்து வந்தனர்.
அவ்வாறான வர்களில் வரணியூர் மக்களும் அடங்குவர். அவர்கள் மனதில் தாழும் இவ்விநாயகரை என்றும் வழிபடக்கருதி விநாயகர் விக்கிரகத்தை அவ்வாலயத்திலிருந்து எடுத்துவந்து நமதூரில் பிரதிஷ்டை செய்யக் கருதினார். அவ்வாறு கொண்டுவரப்பட்டவைகளில் ஒன்றே மாசேரியம் பதியில் பொற்பந்தங்கேணி எனும் வயல், குளம்,காடு.குடிமக்கள் எல்லாம் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். அங்குள்ளது போன்றே விரசத்தி விநாயகர் எனும் நாமமும் அமையலா விற்று.
இவ்விக்கிரகத்தைக் கொண்டு வந்தவேளை வேதாரண்யத்தின் தலவிருட்சமான வன்னி மரத்தையும் கொண்டு வந்து நாட்டியதாகக் கூறப்படுகின்றது.இன்றும் ஆலயத்தில் காலம் கணிக்க முடிவாத மிகவும் பழைய பெரிய வன்னிமரம் இருந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. பொற்பத்தங்கேணி எனும் பழைய குளமே தீர்த்தம் வேதாரண்யத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் சிறிய விநாயகர் விக்கிரம் இன்றும் மூலஸ்தானத்தில் காணப்படுகிறது. இவ்வாலயம் ஆரம்பத்தில் செங்கற்களாற் கட்டப்பட்டு சைவகுருமாராய் பூசை செய்யப்பட்டதாகவும் பின்பு கற்றளியாக்கப்பட்டு பிராமணர் பூசை செய்வதாகவும் உள்ளது. இதற்கெனப் பல நிலங்கள் இவ்வூரில் உண்டு.
இவ்வாலயத்தில் கீழே குறிப்பிடப்பட்ட விஷேட தினங்கள் வெகுமிமர்சையாக நடைபெறுகின்றன.
– தினமும் காலை மற்றும் மாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
– திருவிழா – 01 – 10 நாட்கள்
– மாதம்தோறும் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி மற்றும் தேய்பிறை சதுர்த்தி
– கந்தசஷ்டி விரதம்
– பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) – 01 – 21 நாட்கள்
– திருவெம்பாவை
– சிவராத்திரி விரதம்